8,911 வேலை வாய்ப்பு மோசடி வழக்குகள் பதிவு

3 பிப்ரவரி 2026, 1:39 AM
8,911 வேலை வாய்ப்பு மோசடி வழக்குகள் பதிவு

ஷா ஆலம், பிப் 3: கடந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 8,911 வேலை வாய்ப்பு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், மோசடி கும்பல்கள் பயன்படுத்தும் முக்கிய ஊடகமாக வாட்ஸ்அப் தளம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், வாட்ஸ்அப் 3,822 வழக்குகளை அல்லது பெறப்பட்ட மொத்த புகார்களில் 43 சதவீதத்தைக் கொண்டுள்ளதாகப் புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

இதற்கிடையில், டெலிகிராம் 2,224 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து முகநூல் (1,638), இன்ஸ்டாகிராம் (515), கூகுள் அல்லது வலைத்தளங்கள் (316) மற்றும் தொலைபேசி அழைப்புகள் (225), மீதமுள்ளவை பிற தளங்களை உள்ளடக்கியது.

“இந்த புள்ளிவிவரங்கள், வேலை வாய்ப்பு மோசடியை மேற்கொள்வதற்கான முக்கிய ஊடகமாக தகவல் தொடர்பு செயலிகளைப் பயன்படுத்துவதில் அதிகரிப்பைக் காட்டுகின்றன.

தெளிவான நிபந்தனைகள் இல்லாமல் இலாபகரமான வருமானத்தை உறுதியளிக்கும் வேலை வாய்ப்புகளால் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும், தெரியாத தரப்பினருடன் தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு ருஸ்டி முகமட் நினைவூட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.