கோம்பாக், பிப்ரவரி 1: மாநில அரசு பேச்சுவார்த்தைக்கு திறந்திருக்கிறது, ஆனால் சட்டத்தை மீறியதாக கண்டறியப்பட்ட வழிபாட்டு இல்லங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்.இனங்கள் மற்றும் மதங்களுக் கிடையேயான நல்லிணக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல், பொதுப் பாதுகாப்பை காப்பதும், சுமூகமான வளர்ச்சியை உறுதி செய்வதும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது இந்தக் கொள்கையின் நோக்கமாகும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.2008 முதல், மாநில அரசு வழிபாட்டு இல்லங்களின் நிலையை முறைப்படுத்துவதற்கான ஒரு தொடர்ச்சியான செயல் முறையை கொண்டுள்ளது, அவை சட்டப்பூர்வமாக செயல்படுவதை உறுதி செய்கின்றன.கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் ருக்குன் நெகாராவின் கொள்கைகளுக்கு ஏற்ப, இனம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாப்பது அதன் பொறுப்பு என்று அவர் கூறினார்."நான் ஒரு முஸ்லிம், ஆனால் ஒரு பொறுப்பான தலைவராக, மசூதிகள் மற்றும் சூராவ்கள் சரியாக செயல் படுவதை கவனிப்பது மட்டுமல்லாமல், ஒரு பொறுப்பான அரசாங்கமாக, ருக்குன் நெகாராவில் கூறப்பட்டுள்ள-அதாவது கடவுள் மீதான நம்பிக்கை கோட்பாடுகளின் படி, கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு இல்லங்களும் பாதுகாக்கப் படுவதையும் பராமரிக்கப் படுவதையும் உறுதி செய்ய வேண்டும், இதனால் அவற்றின் செயல்பாடுகள் சட்டபூர்வமானதாகிறது.முன்னதாக (மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்) மாண்புமிகு. பாப்பா ராய்டு சுட்டிக் காட்டியபடி, தெனகா நேஷனல் பெர்ஹாட் ரிசர்வ் நிலம், ஆயர் சிலாங்கூர் ரிசர்வ் நிலம் அல்லது பொதுப் பணித் துறை ரிசர்வ் நிலம் ஆகியவற்றில் (கட்டமைப்புகளை) நாங்கள் அனுமதிக்க முடியாது, ஏனெனில் அதற்கான பயன்பாடுகள் உள்ளன. நாங்கள் இடிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால் மக்கள் கோபப் படக் கூடாது, ஏனெனில் இது வளர்ச்சிக்கு முரணானது; இருப்பினும், நாங்கள் விவாதத்துக்கு தயாராக இருக்கிறோம்."சுபாங்கில் உள்ள ஒரு கோயிலைப் பற்றிய எனது அனுபவத்திலிருந்து, இந்த பிரச்சனை கிட்டத்தட்ட இனப் பதற்றத்தை ஏற்படுத்தியது, ஏனெனில் சில கட்சிகள் 'விஷயங்களைத் தூண்டின' மற்றும் நிலைமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் தற்போதைய நில உரிமையாளருடன் ஒரு ஒப்பந்தம் எட்டப் பட்டவுடன், கோயில் மிகவும் பொருத்தமான இடத்தில் செயல்பட முடிகிறது.."இதுதான் எங்கள் அணுகுமுறை ஆனால் ஒரு கூட்டம் உண்டு, ஒரு பிரச்சனைக்கு தூபமிடுவதும், அவை விஸ்வரூபம் எடுக்கும் போது பதுங்கி கொள்வது அவர்களின் தந்திரோபாயங்கள். பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் சட்டத்தின் ஆட்சியை நாங்கள் நிலைநிறுத்த வேண்டும் "என பத்து மலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் நேற்று இரவு சிலாங்கூர் அளவிலான தைப்பூசம் கொண்டாட்டத்தின் போது அமிருடின் கூறினார்.பொது நலனுக்காக சட்டப்பூர்வ இணக்கத்துடன் மத சுதந்திரத்தை சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பெரும்பாலான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்ற தனது நம்பிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்."சிலாங்கூர் பல இனங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட ஒரு மாநிலமாகும், இது அமைதியாகவும், இணக்கமாகவும், வசதியாகவும் வாழ்கிறது. அதனால்தான், 2008 முதல், கோயில்கள் போன்ற வழிபாட்டு இல்லங்கள் சட்டப்பூர்வமாக செயல்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் உட்பட பல மாற்றங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்."இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை, சில சமயங்களில் பொருத்தமான நிலத்தில் இல்லாத கட்டமைப்புகளை இடிக்க முடிவுகளை எடுக்க வேண்டிய அரசாங்கத்தில் உள்ள இந்திய சமூகத் தலைவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்."இது எளிதான நடவடிக்கை அல்ல. ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதிலும், ஒரு பொறுப்பான அரசாங்கத்தை உறுதி செய்வதிலும், அவர்கள் விவாதங்களில் ஈடுபட தயாராக உள்ளனர்."தற்போதைய மேம்பாட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வழிபாடு தளங்களுக்கு இடம் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்; இன்னும் பல பகுதிகள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன, இருப்பினும் இன்னும் பிரச்சினைகள் உள்ளன மற்றும் சில இடங்கள் தீர்க்கப்பட வேண்டும்" என்று அமிருடின் கூறினார்.
சிலாங்கூர் பேச்சுவார்த்தைக்குத் திறந்திருக்கிறது, சட்டத்தை மீறும் வழிபாட்டு தளங்களிடம் எந்த சமரசமும் இல்லை
1 பிப்ரவரி 2026, 8:00 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஜாலான் பெருசாஹான் 1, பத்து கேவ்ஸ் சாலை மூடல் செப்டம்பர் 1 வரை நீட்டிப்பு
Media Selangor Team
12 ஆகஸ்ட் 2026

selangor
பத்து கேவ்ஸ் வணிக வளாகங்களுக்கு எட்டு அபராதங்களை விதித்தது எம்பிஎஸ் (MPS)
Media Selangor Team
17 ஜூலை 2026

selangor
பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் கிராம மேம்பாட்டு திட்டம்- பாதிக்கப்பட்ட 44 பேருக்கு விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது
Mavitthran
5 பிப்ரவரி 2026

selangor
பத்துமலைக்குப் பிரதமர் அன்வார் வருகை தந்தபோது ஏன் வரவில்லை ? மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் விளக்கம்
Mavitthran
3 பிப்ரவரி 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



