ஷா ஆலாம், பிப் 3- பத்துமலையில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகை புரிந்தார்.
அவரின் வருகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சார்பாக தாம் பங்கேற்காதது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் வருகை தந்த அதே நேரத்தில் தமக்கு லீமாஸ் சிறப்பு செயற்குழுவின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்று பாப்பா ராய்டு வீரமான் விளக்கம் அளித்தார்.
மேலும், அதே நேரத்தில் 20 முதல் 25 ஆலய பிரதிநிதிகளுடன் கூட்டமும் நடைபெற்றதாகவும் லிமாஸ் தலைவர் என்ற முறையில் தாம் கலந்து கொண்டதாக அவர் சொன்னார்.
ஆலய பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்பது தான் தனது தலையாய கடமையாகும். இதனால் தான் தம்மால் அங்கு வருகை புரியாமல் போனதாக பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி பத்துமலைக்கு வருகை மேற்கொண்டார். தைப்பூச திருவிழாவின் இறுதிக்கட்ட பணிகளைப் பிரதமர் பார்வையிட்டிருந்தார்


