சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவதை கட்டுப்படுத்த சபாக் பெர்ணம் நகராண்மை கழகம் கடும் முயற்சி

30 ஜனவரி 2026, 9:10 AM
சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவதை கட்டுப்படுத்த சபாக் பெர்ணம் நகராண்மை கழகம் கடும் முயற்சி

ஷா ஆலம், ஜன 30: சட்டவிரோதக் குப்பை கொட்டும் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த, சிசிடிவி கேமராக்கள் நிறுவுதல் மற்றும் கடுமையான கண்காணிப்பு மூலம் சபாக் பெர்ணம் நகராண்மை கழகம் தனது நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

இதனுடன் இணைந்து, சபாக் பெர்ணம் நகராண்மை கழகத்தின் கார்ப்பரேட் மற்றும் பொதுத் தொடர்பு பிரிவு, அந்த மாவட்டம் முழுவதும் உள்ள 117 பாரம்பரிய கிராமப் பகுதிகளில் 335 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், குடியிருப்பாளர்கள் தங்களது கழிவுகளை சரியான முறையில் அகற்ற இயலும்.

“இருப்பினும், குப்பை தொட்டிகளுக்கு வெளியே குப்பைகளைக் கொட்டும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால், சில பகுதிகள் சட்டவிரோத குப்பை சேகரிப்பு இடங்களாக மாறியுள்ளன.

“குப்பையின் அளவு பெரிதாக இல்லாவிட்டாலும், அந்த இடங்களை முறையான சுத்தம் செய்வது அவசியமாக உள்ளது,” என்று மீடியா சிலாங்கூரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், மாவட்டத்தில் உள்ள குப்பை அகற்றும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் விதிமுறை அமலாக்கத்திற்கான மனிதவளக் குறைபாடு முக்கிய சவாலாக இருப்பதாக அந்த உள்ளூர் நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

“மேலும், புதிய பகுதிகளில் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதும், சட்டவிரோதக் குப்பை அகற்றலை எதிர்கொள்ளும் சபாக் பெர்ணம் நகராண்மை கழகத்தின் முயற்சிக்கு ஒரு முக்கிய சவாலாக உள்ளது,” என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன், அனைத்து மாவட்ட அலுவலகங்களையும், மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் மீது, குறிப்பாக சட்டவிரோதக் குப்பை அகற்றல் விவகாரத்திற்கு விரைவாகத் தீர்வு காண கவனம் செலுத்துமாறு டத்தோ மந்திரி புசார் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், சட்டவிரோதக் குப்பை அகற்றல் முழுமையாக ஒழிக்கப்படுவதை உறுதி செய்ய, குறிப்பாக ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகள் உட்பட அனைத்து இடங்களுக்கும் தானே நேரில் சென்று ஆய்வு செய்வேன் என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.