சீனப் புத்தாண்டு, ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகைகளை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனைக்கு விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன – எம்பிபிஜே

28 ஜனவரி 2026, 8:01 AM
சீனப் புத்தாண்டு, ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகைகளை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனைக்கு விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன – எம்பிபிஜே

ஷா ஆலம், ஜன 28: அடுத்த பிப்ரவரி மாதம் தொடங்கி சீனப் புத்தாண்டு மற்றும் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகைகளை முன்னிட்டு பெட்டாலிங் ஜெயா மாநராட்சி (எம்பிபிஜே) அதன் நிர்வாகப் பகுதியில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்களைத் திறந்துள்ளது.

அனைத்து விண்ணப்பங்களும் முதலில் மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்காக மலேசியக் காவல்துறையிடம் (PDRM) சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் சாரி சமிங்கோன் கூறினார்.

"காவல்துறையினரிடம் இருந்து அனுமதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியல், மேல் நடவடிக்கைக்காகப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்படும்.

"ஜனவரி 15 அன்று பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஷம்சுதீன் மாமட் உடன் நடந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது," என்று அவர் விவரித்தார்.

இதுவரை SS20, PJU 11 மற்றும் பிரிவு 1 உள்ளிட்ட பல இடங்களை உள்ளடக்கிய 32 விண்ணப்பங்களை எம்பிபிஜே பெற்றுள்ளது என முகமட் சாரி தெரிவித்துள்ளார்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வது பிப்ரவரி 10 முதல் மார்ச் 3, 2026 வரை அனுமதிக்கப்படுகிறது மற்றும் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி பிப்ரவரி 3, 2026 ஆகும்.

"ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கொண்டாட்டத்திற்கு, விற்பனை காலம் மார்ச் 5 முதல் மார்ச் 27, 2026 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பங்களுக்கான கடைசி பிப்ரவரி 26, 2026 ஆகும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.