மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் - இந்தியப் பிரதமர் பாராட்டு

27 ஜனவரி 2026, 8:11 AM
மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் - இந்தியப் பிரதமர்  பாராட்டு

புதுடெல்லி, ஜன 27 - ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'மன் கி பாட்' நிகழ்ச்சியின் 130வது அத்தியாயத்தில், இந்திய மொழிகளையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இயங்குவது இந்திய வம்சாவளி மக்களுக்கு பெருமை சேர்ந்துள்ளது என அவர் கூறினார்.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் தமிழுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன. தெலுங்கு, பஞ்சாபி மொழிகளுடன் மற்ற இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு மலேசியாவில் இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உண்மையிலேயே பெருமையாக உள்ளது என்றார்.

இது இந்திய-மலேசிய உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது என்றார் அவர்.

இந்தியக் கலாச்சாரம் உலகளவில் விரிவடைந்து வருவதோடு, அதை பாதுகாப்பதில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இந்நிலையில் பாரம்பரியங்கள், மொழிகள், மதிப்புகள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.