நாட்டில் கோழி மற்றும் முட்டைகளின் கையிருப்பு போதுமானதாக உள்ளது

27 ஜனவரி 2026, 2:42 AM
நாட்டில் கோழி மற்றும் முட்டைகளின் கையிருப்பு போதுமானதாக உள்ளது

கோலாலம்பூர், ஜன 27 - உள்ளூர் சந்தைகளில் கோழி மற்றும் முட்டைகளின் கையிருப்பு போதுமானதாக உள்ளதாகவும், அடுத்த மாதம் குறிப்பாக ரமடான் மாதத்தில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என்றும் அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு கூறினார்.

தற்போது சந்தையில் இந்த இரண்டு பொருள்களின் கையிருப்பு நிலையானதாக இருப்பதை விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சின் தரவுகள் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

"எனினும், சில நேரங்களில் சந்தை மிகவும் பாதிக்கப்படுவதற்கு கடத்தல் பிரச்சனையும் காரணம் என்பதையும் நாங்கள் காண்கிறோம். அதனால்தான் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தொடர்புடைய அமைச்சுகளும் கடத்தல் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்", என மக்களவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின்போது முகமட் சாபு கூறினார்.

சிறிய அளவிலான கால்நடை வளர்ப்போர் பெரிய அளவில் தங்களின் தொழில்துறையை மாற்றுவதற்கு அமைச்சின் முயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் அடிப்படையில் விவசாயிகளின் தயார்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.