தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் இலவச KTMB KOMUTER சேவை

20 ஜனவரி 2026, 6:41 AM
தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் இலவச KTMB KOMUTER சேவை

கோலாலம்பூர், ஜன 20- மலேசியாவில் எதிர்வரும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு KTMB கொமுட்டர் இரயில் சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

சுமார் 1 மில்லியன் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, குறிப்பாக பத்துமலைக்குச் செல்லும் இந்து பக்தர்களுக்கு உதவும் வகையிலும், அவர்களுக்கு இந்தத் திருவிழாவை அர்த்தமுள்ளதாக்கும் வகையிலும் செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் விவரித்தார்.

ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை (அன்று நள்ளிரவு 12:00 மணி முதல் மறுநாள் இரவு 11:59 மணி வரை) பயணிகள் தங்களின் பயண அட்டைகளை நுழைவாயில்களில் உள்ள தானியங்கி ஸ்கேனிங் முறையில் ஸ்கேன் செய்து இலவசமாகப் பயணிக்கலாம்.

இந்த இரண்டு நாட்களில் சுமார் 4,50,000 பயணிகள் பத்துமலைக்குச் செல்ல கொமுட்டர் சேவையைப் பயன்படுத்துவார்கள் என KTMB மதிப்பிட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.