பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கத்தார் நாட்டின் முன்னாள் துணைப் பிரதமர் காலித் முகமது அல் அத்தியாவைச் சந்தித்தார்

19 ஜனவரி 2026, 9:42 AM
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கத்தார் நாட்டின் முன்னாள் துணைப் பிரதமர் காலித் முகமது அல் அத்தியாவைச் சந்தித்தார்

கத்தார், ஜன 19- மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று கத்தாரின் முன்னாள் துணைப் பிரதமரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான காலித் முகமது அல் அத்தியாவைச் சந்தித்து மரியாதை நிமித்தமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைந்திருக்கும் பிரதமரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்புக் குறித்து தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், நடப்பு விவகாரங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய மூலோபாயக் கூட்டாண்மை மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்துத் தாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவித்தார்.

மலேசியா மற்றும் கத்தார் இடையிலான இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்தச் சந்திப்பு பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.