நாட்டின் 15 வது நாடாளுமன்றத்தின் 5ஆவது தவணைக்கான முதலாவது கூட்டத்தொடர்

19 ஜனவரி 2026, 8:53 AM
நாட்டின் 15 வது நாடாளுமன்றத்தின் 5ஆவது தவணைக்கான முதலாவது கூட்டத்தொடர்

கோலாலம்பூர், ஜன 19- 15-வது நாடாளுமன்றத்தின் 5-வது கூட்டத் தொடரை இன்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

மலேசியாவின் 15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான முதல் கூட்டத்தொடர் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, இக்கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்தார்.

நாட்டின் இறையாண்மையையும் அரச மரியாதையையும் பறைசாற்றும் விதமாக, இந்தச் சிறப்பான நிகழ்வில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க கௌரவ வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேரரசர் அரச இசைக்குழுவின் முழக்கங்களுடன் கௌரவக் காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, டேவான் ராக்யாட்டில் (மக்களவை) ஆற்றிய தனது அரச உரையின் (Titah Diraja) மூலம் சுல்தான் இப்ராஹிம் முறைப்படி நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார். இந்த ஆண்டின் நாடாளுமன்றத் கால அட்டவணையின்படி, மக்களவை மொத்தம் 20 நாட்கள் கூடவுள்ளது.

இக்காலக்கட்டத்தில், பேரரசரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள், அமைச்சுக்களின் பதில்கள், புதிய சட்ட மசோதாக்கள் (RUU) தாக்கல் செய்தல் மற்றும் குறிப்பிட்ட விடுமுறை நாட்களை கருத்தில் கொண்ட அமர்வுகளில்   பல்வேறு முக்கியப் பணிகள் நடைபெற உள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.