கோலாலம்பூர் ஜன 19- செலாயாங்கில் உள்ள பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டு திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.
கலகம் பிறந்ததால் தான் எதாவது ஒரு தீர்வு கிடைக்கும். அந்த வகையில் பத்துமலை மின் படிக்கட்டு திட்டத்திற்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று அவர் சொன்னார்.
டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நேற்று பத்துமலை திருத்தலத்தில் முக்கிய சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பராய்டு மற்றும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டு அமைக்கும் பணியில் உள்ளது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் நான் இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.


