ஷா ஆலாம், ஜன 8- பத்துமலை மின்படிக்கட்டு விவகாரத்தில் அனைத்தும் சட்டமுறைப்படி தான் நடைபெற வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மனித வளம் & வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் கூறினார்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் முறையாக தேசிய சங்கங்களின் பதிவிலாகாவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை மாநில ஆட்சிக்குழு மன்ற குழு விதியில் வரையறுக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார். கட்டுமான அனுமதிக்கு தேவையான அணுகுமுறைகளை விண்ணப்பத்தார் பின்பற்ற வேண்டும் .
மின் படிக்கட்டு அமைப்பதில் மாநில அரசாங்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் ஆலய நிர்வாகம் முறையாக ஓர் அமைப்போ அல்லது ஓர் இயக்கத்தின் பதிவு பெற்றிருத்தல் அவசியம் என்று பாப்பா ராய்டு தெளிவுப்படுத்தினார்.


