மின் படிக்கட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முன்னோக்கி நகர்வோம் - அமைச்சர் கோபிந்த் சிங் அழைப்பு

19 ஜனவரி 2026, 3:48 AM
மின் படிக்கட்டு  சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முன்னோக்கி நகர்வோம் - அமைச்சர் கோபிந்த் சிங்  அழைப்பு

கோலாலம்பூர், ஜன 19- பத்துமலை திருத்தலத்தில் அமையவுள்ள மின் படிக்கட்டு (Escalator) திட்டத்தில் நிலவும் சட்ட சிக்கல்களைத் தீர்க்க, நாட்டின் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நேற்று ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

மின் படிக்கட்டு அமையவுள்ள நிலத்திற்கான தற்காலிக நிலப் பயன்பாட்டு உரிமம் (TOL), கோவில் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவின் தனிப்பட்ட பெயரில் தாக்கல் செய்யப்பட்டதாக எழுந்த கருத்தே இத்திட்டத்தின் தாமதத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது.

எனினும், தாம் ஒரு அறங்காவலர் (Trustee) என்ற முறையிலேயே விண்ணப்பித்ததாக டான்ஸ்ரீ நடராஜா விளக்கம் அளித்துள்ளார்.

சிலாங்கூர் மாநில அரசு மற்றும் கோவில் நிர்வாகம் ஆகிய இரு தரப்பும் இணைந்து, சட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்து இந்த விண்ணப்பத்தை விரைவாக அங்கீகரிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

இது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், சட்டப்பூர்வமான தீர்வுகளின் மூலம் இப்பணியை முன்னெடுக்க அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமூக நலன் கருதி இவ்வாண்டு தைப்பூசத்தைச் சிறப்பாகக் கொண்டாடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

நேற்றைய சந்திப்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு மற்றும் முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.