ஶ்ரீ அமானில் உள்ள இல்லத்தில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்ட கணவன் - மனைவி; போலீஸ் விசாரணை

14 ஜனவரி 2026, 7:26 AM
ஶ்ரீ அமானில் உள்ள இல்லத்தில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்ட கணவன் - மனைவி; போலீஸ் விசாரணை

கூச்சிங், ஜன 14- ஶ்ரீ அமானில் உள்ள ஓர் இல்லத்தில் 40 வயதுடைய கண்வன் - மனைவி இருவரும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தைப் போலீஸ் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று சரவாக் மாநில போலீஸ் தலைவர் சைனால் அப்துல்லா கூறினார்.

இறந்த ஆடவர் ஒரு பள்ளி தலைமையாசிரியர் என்றும் அவரின் மனைவி ஶ்ரீ அமான் மருத்துவனையில் பணிபுரியும் ஒரு தாதியர் எனவும் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடுமையான காயங்களுக்கு இலக்கான வேளையில் இருவரும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் குற்றவியல் சட்டத்தின் செக்‌ஷன் 302 கொலை குற்றமாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.