முன்னாள் சட்டத்துறை தலைவருக்கு எதிரான நஜிப் ரசாக்கின் அவதூறு வழக்கு முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது

13 ஜனவரி 2026, 4:38 AM
முன்னாள் சட்டத்துறை தலைவருக்கு எதிரான நஜிப் ரசாக்கின் அவதூறு வழக்கு முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது

புத்ராஜெயா, ஜன 13- முன்னாள் தேசிய சட்டத்துறை தலைவர் டான்ஶ்ரீ தோமி தோமஸுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை மீண்டும் உயிர்ப்பிக்க முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கொண்டு வந்த மேல்முறையீட்டை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது

நீதிபதிகள் பி.ரவீந்திரன், வோங் கியா கியோங், மற்றும் நட்ஸரின் வொக் நோர்டின் ஆகியோர்  கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கினை விசாரித்தனர். கடந்த நவம்பர் 25, 2022ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நிலை நிறுத்துவதாக கூறி இந்த மேல்முறையீட்டை நிராகரித்தனர்.

1எம்.டி பி வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு மற்றும் அனைத்துலக பெட்ரோலியும் நிறுவனத்தின் குற்றச்சாட்டு தொடர்ந்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, விசாரணையை அலட்சியமாக மேற்கொண்டது என்று தோமி தோமஸ் மீது நஜிப் ரசாக் வழக்குத் தொடர்ந்தார்.

மேலும், முன்னாள் தேசிய சட்டத்துறை தலைவர் டான்ஶ்ரீ தோமி தோமஸ் அவர்களுக்கு டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் 12 ஆயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.