டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை உட்படுத்திய கூடுதல் உத்தரவு - மன்னிப்பு வாரியம், மலாய் ஆட்சியாளர்களின் மதிப்பை குறைத்து மதிப்பிடவில்லை

24 டிசம்பர் 2025, 4:28 AM
டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை உட்படுத்திய கூடுதல் உத்தரவு - மன்னிப்பு வாரியம், மலாய் ஆட்சியாளர்களின் மதிப்பை குறைத்து மதிப்பிடவில்லை

கோலாலம்பூர், டிச 24- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவு முடிவை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். தேசிய சட்டத் துறை தலைவர் அலுவலகம் (ஏஜிசி) இதனை தெரிவித்தது.

கூடுதல் உத்தரவு தொடர்பான நஜிப் ரசாக்கின் நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை தவறாகப் புரிந்து கொள்வதன் மூலம் பொது ஒழுங்கை தூண்டி சீர்குலைக்க முயற்சிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் எதிராக ஏஜிசி எச்சரித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் பொருத்தமற்றவை. மேலும் முன்னாள் பிரதமரின் மேல்முறையீட்டை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.

நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மாமன்னர், மலாய் ஆட்சியாளர்கள் ஆகியோரின் மன்னிப்பு விஷயங்களில் அதிகாரத்தைக் குறைத்து விட்டது என்ற கூற்றுகளையும் ஏஜிசி மறுத்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.