கோலாலம்பூர், ஜன 12- கோலாலம்பூரில் 2026ஆம் ஆண்டு பள்ளித்திறப்பு நிகழ்ச்சி சீராக நடைபெற்றதாக கோலாலம்பூர் கல்வித்துறை இயக்குநர் மெகாட் அஃபாண்டி டத்தோ வீரா ஹஜி கூறினார்.
கோலாலம்பூரில் கல்வி செயலாக்கம் தொடர்ந்து நிலைப்பெற JPWKL துறை தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தரவுகளின் அடிப்படையில் மாணவர்கள் பள்ளியில் அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதுவரை 242 பள்ளிகள் ஒரு நேர பள்ளி நேரத்தைப் பின்பற்றுகின்றன.
47 பள்ளிகள் இரு பள்ளி நேர கொள்கையை கொண்டு இயங்குவதாகவும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை தொடர்ந்து சீராக அமைய இது வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று ஜனவரி 12ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான பள்ளித் திறப்பு நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.



