மூத்த இராணுவ அதிகாரியை உட்படுத்திய ஊழல் விவகாரம்; எம்.ஏ.சி.சியிடம் வாக்குமூலம் மீண்டும் வழங்கப்படுகிறது

12 ஜனவரி 2026, 4:35 AM
மூத்த இராணுவ அதிகாரியை உட்படுத்திய ஊழல் விவகாரம்; எம்.ஏ.சி.சியிடம் வாக்குமூலம் மீண்டும் வழங்கப்படுகிறது

பெட்டாலிங் ஜெயா, ஜன 12- நிதியைத் தவறாக கையாடல் செய்த புகாரின் அடிப்படையில் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் வழங்க மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சி.சி. வட்டாரம் தெரிவித்தது.

12 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட மூத்த இராணுவ அதிகாரி எம்.ஏ.சி.சி தலைமையகத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

வாக்குமூலம் வழங்க இன்று காலையில் மீண்டும் அவர் அழைக்கப்படலாம் . இந்த விவகாரம் குறித்து ஊழல் விசாரணை தொடர்வதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆயுத தளவாடங்களை வாங்கும் திட்டத்தில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் 50 வயது மதிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் விசாரிக்கப்படுகிறார்.

இராணுவ சட்டவிரோத கூட்டமைப்பு (கார்டல்) மூலம் ஊழல் நிகழ்ந்திருப்பதாக கூறி முன்னாள் இராணுவ தள்பதியும் அவரின் இரண்டு மனைவிகளும் அண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.