சிரம்பானில் போலி வேலை வாய்ப்பு மோசடி கும்பல் கைது

9 ஜனவரி 2026, 4:21 AM
சிரம்பானில் போலி வேலை வாய்ப்பு மோசடி கும்பல் கைது

ஷா ஆலம், ஜன 8: சிரம்பானில் உள்ள வீடு ஒன்றை போலி இணைய வேலை வாய்ப்பு மோசடி நடவடிக்கைக்காகப் பயன்படுத்தி வந்த கும்பலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கும்பல் வெளிநாட்டினரை குறிவைத்து செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டதாக சிரம்பான் துணை காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் அம்ருல் யாசிட் அனுவார் தெரிவித்தார்.

இது நெகிரி செம்பிலான் காவல் தலைமையகத்தின் வணிக குற்ற புலனாய்வுத் துறையின் (JSJK) உளவுத்துறை / செயல்பாட்டு பிரிவு மேற்கொண்ட தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளின் அடிப்படையில், சிரம்பான் மாவட்ட வணிக குற்ற விசாரணை பிரிவு (BSJD) உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை. ஆகும்.

"சிரம்பான் மாவட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ``Ops Belatuk`` மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது," என்று முகமட் அம்ருல் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

28 முதல் 46 வயதுக்குட்பட்ட மொத்தம் ஒன்பது வெளிநாட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

"வெளிநாட்டியினரை குறிவைத்து போலி இணைய பகுதிநேர வேலை வாய்ப்பு மோசடியில் அனைத்து சந்தேக நபர்களும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.