பத்துமலை முருகன் திருத்தலம் பொது சொத்து; தனிநபருக்கு சொந்தமானதல்ல- டான்ஸ்ரீ ஆர். நடராஜா தகவல்

8 ஜனவரி 2026, 9:43 AM
பத்துமலை முருகன் திருத்தலம் பொது சொத்து; தனிநபருக்கு சொந்தமானதல்ல- டான்ஸ்ரீ ஆர். நடராஜா தகவல்

கோலாலம்பூர், ஜன 8- பத்துமலை முருகன் திருத்தலம் பொது சொத்து. தனிநபருக்கு சொந்தமானது அல்ல என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

பத்துமலையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் மின் படிக்கட்டு விவகாரம் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு செய்தியாளர்களிடம் பேசியது எங்களுக்கு பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உண்மை தெரியாமல் அவர் பேசியிருப்பது எனக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

இதற்காக மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் மன்னிப்பு கேட்க வேண்டும். இதன் அடிப்படையில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கறிஞர் நோட்டீஸ்க்கு அவர் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று டான்ஸ்ரீ நடராஜா திட்டவட்டமாக சொன்னார்.

மேலும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் இயங்குகிறது. எந்தவொரு நடவடிக்கைகளும் முடிவுகளும் சட்டத் துறை தலைவரின் அனுமதியோடுதான் மேற்கொள்ளப்படும்.

ஆக தவறான தகவல்களையும் செய்திகளையும் பரப்ப வேண்டாம் என்று டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.