ஷா ஆலாம், ஜன 5- சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா எதிர்வரும் ஜனவரி 17ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளதாக சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் அறிவித்தார்.
ஜனவரி 17ஆம் தேதி இந்த மாநில அளவிலான பொங்கல் விழா டேவான் டத்தோ அஹ்மட் ரசாலி பல்நோக்கு மண்டபத்திலும் கம்போங் தாசெக் பெர்மாயில் உள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலும் நடைபெறவுள்ளது.
இந்த பொங்கல் விழா என்பது தை மாதத்தின் தொடக்கமாகவும் இந்துக்களின் பாரம்பரிய பண்பாட்டு விழாவாகவும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. ஆக, இந்த பொங்கல் விழாவில் அனைவரும் கலந்து கொண்டு மாநில அளவிலான பொங்கல் விழாவைச் சிறப்பிக்குமாறு பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கேட்டுக்கொண்டார்.








