கோலாலம்பூர், ஜன 9 - இந்த ஆண்டு மலேசியாவில் பொங்கல் திருநாள் எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி கொண்டாடப்படும் என மலேசிய இந்து சங்கம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மலேசிய இந்து சங்கம் வெளியிட்டுள்ள போஸ்டர் அடிப்படையில், ஜனவரி 14ஆம் திகதி அன்று மலேசிய நேரப்படி இரவு 9.23க்கு தை மாதம் பிறக்கின்றது. அதனால், பொங்கல் திருநாள் மறுநாள் அதாவது ஜனவரி 15ஆம் திகதி கொண்டாடப்படும்.
ஜனவரி 15ஆம் திகதி அன்று காலை 6.10 முதல் 7.20 மணி வரையிலும், காலை 9.10 முதல் 11.30 மணி வரையிலுமுள்ள சுபநேரங்களில் பொங்கல் வைக்கலாம் என மலேசிய இந்து சங்கத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மாலை நேரத்தில் பொங்கல் வைக்க நினைப்பவர்கள் மாலை மணி 4.20 முதல் 6.20 வரை உள்ள சுபநேரத்தில் பொங்கல் வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, மலேசியா தமிழர்கள் அனைவருக்கும் மலேசிய இந்து சங்கம் சார்பாக அதன் தலைவர் தனது பொங்கல் வாழ்த்தினை தெரிவித்தார்.



