பூச்சோங் ஸ்ரீ முருகன் சேவை மைய பொங்கல்-தமிழ் வருட பிறப்பு நிகழ்வு

18 ஜனவரி 2026, 1:19 PM
பூச்சோங் ஸ்ரீ முருகன் சேவை மைய   பொங்கல்-தமிழ் வருட பிறப்பு நிகழ்வு

பூச்சோங் 18 ஜனவரி:- பூச்சோங் ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட சௌஜானா பூச்சோங் ஸ்ரீ முருகன் சேவை மையம்  இன்று  ஞாயிற்றுக்கிழமை  காலை 8.00 மணி முதல் மிக விமரிசையாக பொங்கல்-தமிழ் வருட பிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.

காலையில்  குத்துவிளக்கேற்றி காலை பூஜையுடன் தொடங்கிய நிகழ்வு மூன்று பொங்கல் பானைகள் இட்டு குடியிருப்பாளர்கள் ஒன்று சேர்ந்து  பொங்கலிட்டனர். தொடர்ந்து  தேவார வகுப்பு குழந்தைகள் தேவாரம் பாட,  சிறு குழந்தைகளுக்கு  வர்ணம் தீட்டும் போட்டி ஒரு புறம் நடைபெற்றது.

காலை சிற்றுண்டிக்கு ஊடே இந்தியர்களின் தற்காப்பு கலையை பயிலும் மாணவர்கள் தாங்கள் கற்ற கலையை  அரங்கில்  படைத்தனர்., அதனை  தொடர்ந்து 'நிரந்திய நிறைஞ்சான  பைன் ஆட்ஸ்'' மாணவர்கள்  வழங்கிய இந்திய பரத நாட்டியம் வந்திருந்த விருந்தினர்களை  கவர்ந்திழுத்த வேளையில் ஜெயஸ்ரீ பஜன் இசை கலைஞர்கள்  வழங்கிய தவில்,  உறுமி, மற்றும் பஜன் உள்ளூர் பிள்ளைகளின்  திறமைகளை வெளிப் படுத்தியது.

அந்த நிகழ்வுக்கு  சிறப்பு வருகை அளித்த ஸ்ரீ செர்டாங்  சட்டமன்ற உறுப்பினர்  நிகழ்ச்சிகளை  ரசித்து , ஸ்ரீ முருகன் சேவை மையம் மேற்கொண்டு வரும் சமூக சேவையை பாராட்டினார். பிள்ளைகளின்  கல்வி மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்து  கற்பிக்கும் சேவை  அந்த குழுவின் அர்ப்பணிப்பை அங்கீகரித்து பாராட்டினார்.

சிறுவர்களுக்கு  ஓய்வு நேரங்களில் பல வித விளையாட்டு மற்றும்  கலாச்சார நிகழ்வுகள் கற்பித்து அங்கு வாழும் மக்கள் தங்கள் ஓய்வு நேரங்களை சிறப்பாக பயன் படுத்துவதை பாராட்டினார்.

இது போன்று  ஆக்ககரமான நிகழ்வுகளை படைக்கும்  சேவை மையத்துக்கு தான் நிதி உதவி வழங்கியதாகவும், இவ்வாண்டும் மகளிர் மேம்பாட்டிற்கு சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள சௌஜானா பூச்சோங் ஸ்ரீ முருகன் சேவை மையம்  ஆர்வம் கொண்டுள்ளது, அதற்கு நிதி உதவி கேட்டுள்ளனர். அடுத்த மாதம் அதற்கான செலவு விவர அறிக்கையுடன் விண்ணப்பத்தை  தனது  அலுவலகத்திற்கு  அனுப்ப  கேட்டுக்கொண்டார்.

மேலும் பிள்ளைகள் கோலாட்டம் உரி அடித்தல் மற்றும் வெற்றியாளர்களுக்கான பரிசு மற்றும் உணவுகளுடன் நிகழ்வை கலகலப்பாக  படைத்தனர்.

இறுதியாக மீடியா சிலாங்கூரிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர், இன உணர்வுகளை தூண்டி நாட்டில் வேற்றுமைகளை வளர்க்கும் மன்றங்ளிடயே இது போன்ற மக்கள் சேவையை குறிக்கோளாக கொண்டு செயல்படும் மன்றங்களும் உண்டு. மாநில அரசும் தானும் கலாச்சார , கல்வி, மற்றும் சமய நிகழ்வுகளுக்கு உதவி வருவதாகவும். அடுத்த வரும்  சுக்மாவின் சில விளையாட்டுகளும் இந்த தொகுதியில் நடைபெறும் என்றார்.

அத்துடன் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடியிருப்பாளர்  வீட்டு பட்டா விவகாரத்திற்கு தீர்வு காணும் நோக்கில்  சில வேலைகள் நடத்து வருவதாகவும். இப்பொழுது அதிகாரப்பூர்வ கலைப்பாளர் (லீக்குடேட்டர்) 2.5 சதவீதத்திலிருந்து   1.5 சதவீதத்துக்கு குறைக்க  ஒப்புக் கொண்டுள்ளதால் , இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.