அன்வார்: இன இணக்கம் நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை உந்துகிறது

4 ஜனவரி 2026, 2:08 AM
அன்வார்: இன இணக்கம் நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை உந்துகிறது

கோலாலம்பூர், 3 ஜன: நாட்டின் சுற்றுலா தொழில்துறை நல்ல வளர்ச்சியைத் தொடர்கிறது. மலேசியாவின் அமைதியான நிலைமை, மேலும் பல்வேறு இனங்கள் இணக்கமான சூழலில் வாழ்வது காரணமாக என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் செழிப்பான கலாச்சாரத்துடன் கூடிய இன வேறுபாடு அனைத்து மக்களாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பெருமை என்று அவர் கூறினார்.

“நாம் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரத்தையும் பார்க்கிறோம், பெர்லிஸ் முதல் சபா மற்றும் சரவாக் வரை அனைத்து இனங்களும் தங்கள் கலாச்சாரத்தில் பெருமை கொள்கின்றன.

இதை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று அவர் இன்று இரவு இங்குள்ள பாவிலியன் புக்கிட் பிந்தாங்கில் ‘ஐ லைட் யூ’ (I LITE U) புதுமை விளக்கு திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய போது தெரிவித்தார்.

வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசு அமைச்சர் ஙா கோர் மிங்; பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) ஹன்னா இயோ; சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டியோங் கிங் செங்; தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் மற்றும் துணை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தொடக்க விழா ஆஸ்கர் விருது வென்ற தான் ஸ்ரீ மிச்செல் இயோவின் வருகையால் சிறப்புற்றது. அவர் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) நல்லுறவு தூதராகவும் உள்ளார். அமைதியான மற்றும் மென்மையான சூழலில் கோலாலம்பூரில் ‘ஐ லைட் யூ’ திட்டத்தை ஏற்பாடு செய்த அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

“ஹன்னா இயோ இப்போது கோலாலம்பூரை பராமரிக்கிறார், பாருங்கள் அமைதியும், அனைத்து இனங்களும் உள்ளனர், கீப் இட் அப், நன்றி சக ஊழியர்களே, நாம் இதை இணைந்து செய்வோம்” என்றார்.நடிகை மிச்செல் இயோ வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசு அமைச்சக த்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முன்முயற்சியின் தொடக்க விழாவுக்கு வந்ததற்கு அன்வார் நன்றி தெரிவித்தார்.

அவர் மிச்செல் இயோவை பல்துறை திறமை கொண்ட ஒழுக்கமானவருமாக விவரித்தார். ஹாலிவுட்டில் சிறந்து விளங்கி நாட்டை பெருமைப் படுத்தியுள்ளார்.“இது அரிதான மரியாதை, ஒரு இன்பமும் உயரிய மரியாதையும் அனைத்து மலேசிய மக்களுக்கும் கிடைத்தது.

ஏனெனில் அவர் ஒரு மலேசியர், நாம் இணைந்து இந்த சிறந்த தலைவரை கொண்டுள்ளோம், ஆசியாவின் முதல் ஆஸ்கர் வென்றவர்” என்று பிரதமர் கூறினார்.“பேராக்கில் உள்ள ஒரு சிறிய நகரத்திலிருந்து ஒரு மலேசிய பெண் ஹாலிவுட்டின் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்ததை நிரூபிக்க அவரை உந்தியது என்ன?” என்று அவர் கேட்டார்.

ஐ லைட் யூ (I LITE U), இன்ஃப்ராஸ்ட்ரக்சர், லைட், இன்னோவேஷன், டெக்னாலஜி, இக்கோ சஸ்டெய்னபிள் டு அர்பனைசேஷன் என்பதன் சுருக்கம். இது நகர்ப்புற நிலப்பரப்பை அழகுபடுத்தி கோலாலம்பூரின் உலக சுற்றுலா ஈர்ப்பை உயர்த்தும் உத்தி முன்முயற்சி. 2026 மலேசியா சுற்றுலா ஆண்டுக்கு (VMY 2026) என்றார்.இது 28 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் RM76 பில்லியன் தேசிய வருமானத்தை இலக்காகக் கொண்டது.

இந்தத் திட்டம் கோலாலம்பூரை மற்ற உலக நகரங்களில் இருந்து வேறுபடுத்துகிறது. நகர விளக்குகள் மூலம் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் நிலைத்தன்மைக்கான நகரத்தை உருவாக்குதல்; நடை பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உயர்த்துதல்; இரவு நேரத்தில் சுற்றுலா மையங்களுக்கு அணுகலை எளிதாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.