மலேசியா கோப்பை: சிலாங்கூர் முதல் சுற்றில் கிளந்தானை எதிர்கொள்ளும்

3 ஜனவரி 2026, 4:39 AM
மலேசியா கோப்பை: சிலாங்கூர் முதல் சுற்றில் கிளந்தானை எதிர்கொள்ளும்

கோலாலம்பூர், ஜன 2 —மலேசியா கோப்பையை 33 முறை வென்ற சிலாங்கூர் , கிளந்தான் தி ரியல் வாரியர்ஸ் எஃப்சி யை தனது முதல் ஆட்டத்தில் எதிர்கொள்ளும், அந்த ஆட்டத்தின் வெற்றியாளர் இமிகிரேசன் எஃப்சி அல்லது நெகிரி செம்பிலான் எஃப்சியை எதிர்கொள்ளும்.

 

கூச்சிங் எஃப்சி பினாங் எஃப்சி யை சந்திக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது மற்றும் சேமி புரோ கிளாந்தான் ரெட் வாரியர்ஸ் எஃப்சி டிபிஎம்எம் எஃப்சியை எதிர்கொள்ளும்.

இதற்கிடையில், 2021 மலேசியா கோப்பை சாம்பியன்கள் கோலாலம்பூர் சிட்டி எஃப்சி சேமி புரோ  லீக் அணி ஏ1 பேராக் எஃப்ஏவை சந்திக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 அதேசமயம் மற்றொரு சேமி புரோ அணி, யூஎம்-டமன்சாரா யுனைடெட் திரங்கானு எஃப்சியை எதிர்கொள்ளும்.

16 சுற்று போட்டிகள் ஜனவரி 17 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, இறுதிப் போட்டி மே மாதத்தில் நடைபெறும்.

காலிறுதிக்கு செல்லத் தவறிய அணிகள் 2025-2026 மலேசியன் ஃபுட்பால் லீக் (எம்எஃப்எல்) சேலஞ்ச் கோப்பையில் தங்கள் சவாலைத் தொடரும்.

 

போட்டியின் மறுபக்கத்தில், மலேசியா கோப்பை நடப்பு வெற்றியாளர் ஜோகூர்  டாருல் தாசிம் (ஜேடிடி) ஜனவரி 17 அன்று முதல்  சுற்றுப் போட்டியில் பிடிஆர்எம் எஃப்சிக்கு எதிராக தங்கள் வெற்றியாளர்  நிலையை தற்காக்க விளையாடுவார்கள் .

இன்றிரவு மலேசியா கோப்பை டிராவில், தென் மண்டல புலியென அழைக்கப்படும் ஜோகூர்  தனது  எதிர் அணிகளை அவர்கள் இடத்தில்  சந்தித்து விளையாடும் மறு சந்திப்பில்   ஜோகூரில் சுல்தான் இப்ராஹிம் ஸ்டேடியத்தில் விளையாடும் மேலும் அவர்கள் காலிறுதி நிலைக்கு முன்னேறினால், மலாக்கா எஃப்சி அல்லது சபா எஃப்சியை சந்திப்பார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.