சிலாங்கூர் 2026 முதல் உடல் உறுப்பு தான அஜெண்டாவை தீவிரப்படுத்துகிறது

1 ஜனவரி 2026, 4:51 AM
சிலாங்கூர் 2026 முதல் உடல் உறுப்பு தான அஜெண்டாவை தீவிரப்படுத்துகிறது

சிலாங்கூர் 2026 முதல் உடல் உறுப்பு தான அஜெண்டாவை தீவிரப்படுத்துகிறது

ஷா ஆலம், 31 டிசம்பர்: சிலாங்கூர் மாநில அரசு, உடல் உறுப்பு தான விழிப்புணர்வை உயர்த்தி தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தும். இது மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (KKM) தேசிய அஜெண்டா உடன் ஒத்துப்போகும். அமைச்சகம் இன்னும் குறைந்த பங்கேற்பு விகிதத்தை எதிர்கொண்டுள்ளது.

சிலாங்கூர் பொது சுகாதார ஆட்சிக்குழு  உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறுகையில், உறுப்பு தானம் 2026 முதல் மாநில சுகாதார கொள்கையின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருக்கும். இது மக்களின் ஒட்டுமொத்த நலனை வலுப்படுத்தும் மாநில அரசின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகும்.

“இந்த முன்முயற்சி நாட்டில் இன்னும் குறைவான உறுப்பு தான விகிதத்தை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டது. இது அனைத்து அடுக்குகளிலும் ஒருங்கிணைந்த கவனம் மற்றும் நடவடிக்கை தேவை.

விளக்க கூட்டங்கள் (கேம்பெயின்கள்) தானம் செய்பவர்களின் பதிவுக்கு மட்டும் கவனம் செலுத்தாமல், பொது விழிப்புணர்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கும். குடும்பங்கள் தனிநபர்களின் உடல் உறுப்பு தான விருப்பத்தை மதிக்க வேண்டும்.

நாங்கள் (சிலாங்கூர் மாநில அரசு) மத்திய அரசின் விருப்பத்தை ஆதரிக்கிறோம். ஏனெனில் இது மிக முக்கியமானது மற்றும் அனைவரின் உறுதிப்பாடு தேவை” என்று அவர் கூறினார்.

முன்னதாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர்  ஜூல்கிப்ளி அகமது  , உறுப்பு இடமாற்றம் தேசிய அஜெண்டாவாக மறு வடிவமைக்கப்படும் என்று தெரிவித்தார். இது KKM-இன் தேசிய இடமாற்ற மையத்தை (NTC) மறுசீரமைக்கும் முயற்சியுடன் ஒத்துப்போகும். NTC கொள்கை, நிர்வாகம் மற்றும் தேசிய அளவிலான ஒருங்கிணைப்பை உந்தும் மைய அமைப்பாக இருக்கும்.

அதோடு, சிலாங்கூர் மன நலன் (மென்டல் செஹாட்) (SEHAT) திட்டம் மூலம் இளைஞர்களின் மனநலத்தை வலுப்படுத்துதல், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் பியர்-ஸெட் (Peer-Z) ரைலட் திட்டத்தை அமல்படுத்துவது போன்றவை மாநில அரசின் கவனத்தில் உள்ளன. இது ராக்கான் செபயா ஆதரவு அடிப்படையிலான ஆரம்ப தலையீடு.

“உணர்ச்சி அழுத்தத்தை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி பெற்ற ராகன் செபயா உதவி செய்வார். தேவைப்பட்டால் பள்ளி கவுன்சலர்கள் அல்லது மனநல நிபுணர்களுக்கு அனுப்பப்படுவர்” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

ஜமாலியா கூறுகையில், மக்களின் சுகாதார அணுகல் தொடர்ச்சியாக பேணப்படும். இதில் இல்திசாம் சிலாங்கூர் செ ஹாட் (ISS), பந்து செஹாட் சிலாங்கூர் (BSS), சிலாங்கூர் சாரிங், சிலாங்கூர் கேன்சர், ஜந்துங் சிகிச்சை திட்டம், அனாக் சிலாங்கூர் அனாக் செஹாட் (ASAS) மற்றும் சிலாங்கூர் உயிர் இன்சூரன்ஸ் திட்டம் (SLIM) போன்றவை அடங்கும்.

அதேநேரம், முதியவர்களின் சுகாதாரப் பராமரிப்பு வலுப்படுத்தப்படும். இதில் வழக்கமான சோதனைகள், பிசியோதெரபி சிகிச்சை மற்றும் மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட பின்தொடர்தல் ஆகியவை அடங்கும். இளைஞர்களிடையே இலொக்ட்ரோனிக் சிகரெட் அல்லது வேப் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வு கேம்பெயின்கள் தொடரும்.

நிலைத்தன்மை அஜெண்டா பற்றி விளக்கிய அவர், சிலாங்கூர் ராகன் பூமி திட்டத்தை அறிமுகப் படுத்தும் என்றார். பிளாஸ்டிக் இல்லாத கேம்பெயின்களை தீவிரப்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மாநில உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும்.

இந்த அனைத்து முன் முயற்சிகளும் சிலாங்கூர் மக்களின் நலனுக்காக மிகவும் உள்ளடக்கிய, உறுதியான மற்றும் நிலைத்தன்மைக்கான சுகாதார அமைப்பை உருவாக்கும் மாநில அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்று அவர் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் 2025-ஆம் ஆண்டுக்கு பதிவு செய்த RM3 பில்லியன் வருவாயை சேகரித்ததுஷா ஆலம், டிசம்பர் 31 — மாநில நிர்வாகம் இந்த ஆண்டு RM3 பில்லியன் வருவாயை சேகரித்துள்ளது. இது சிலாங்கூரின் வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனை.இந்த நல்ல செய்தியைப் பகிர்ந்துகொண்ட மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த எண்ணிக்கை இதுவரை அடைந்த உச்சம் என்று கூறினார்.“அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கு புகழ்), 2025-ஆம் ஆண்டின் இறுதி நாளில், மாநில அரசு RM3 பில்லியன் வருவாயை வெற்றிகரமாக அடைந்துள்ளது என்ற நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அனைவருக்கும் எனது உண்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்), சிலாங்கூர் 2026-இல் இன்னும் முன்னேற்றம் அடையும் வகையில் நாங்கள் இன்னும் கடினமாக உழைப்போம்” என்று அவர் இன்று பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.RM3 பில்லியன் வருவாய் சேகரிப்பு, மாத தொடக்கத்தில் இருந்ததை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். அப்போது அமிருடின், இதுவரை RM2.7 பில்லியனுக்கும் மேல் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும், இது மாநில அரசின் ஆரம்ப இலக்கான RM2.3 பில்லியனைத் தாண்டியது என்றும் கூறினார்.அதை முழு மாநில நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்குக் காரணமாக அவர் சுட்டிக்காட்டினார்.அதேபோல், கடந்த மாதம் சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் அமிருடின், துணை நிறுவனங்களின் டிவிடெண்ட் கள், முதலீடுகள் மற்றும் நீர் கட்டணங்கள் மூலம் கணிசமான வருவாய் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.2022 முதல் ஆண்டுக்கு சுமார் RM40 மில்லியன் டிவிடெண்ட்கள் மட்டும் சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரும் ஆண்டுகளில் ஜீரோ டிஸ்சார்ஜ் கொள்கை (ZDP) மற்றும் டார்க் ஃபைபர் திட்டங்கள் போன்ற புதிய ஆதாரங்களிலிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.கடந்த ஆண்டின் செயல்பாடும் எதிர்பார்ப்புகளை தாண்டியது. ஜனவரியில் மந்திரி புசார், மாநில அரசு RM2.858 பில்லியன் வருவாயை பதிவு செய்துள்ளதாக கூறினார். அது அப்போது ஒரு மைல்கல் சாதனையாக இருந்தது.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.