மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்

18 டிசம்பர் 2025, 7:08 AM
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்

புத்ராஜெயா, டிச 18- மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் இன்று அதிகாரப்பூர்வமாகப் பணியைத் தொடங்கினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.நேற்று மாட்சிமை தங்கிய மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்ட பின்னர் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் இன்று காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக பணியைத் தொடங்கினார். அதன் பின், மனிதவள அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு கூட்டத்தை அவர் நடத்தினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.