பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும்

18 டிசம்பர் 2025, 1:46 AM
பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும்

கோலாலம்பூர், டிச 18: ஆண்டு இறுதி பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 19, 20, 22, 23, 24, 26, 27 மற்றும் ஜனவரி 2 ஆகிய உச்ச நாட்களில், தங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகளில் தினமும் சுமார் 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என பிளஸ் (PLUS) நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இதனால்,போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் பிளஸ் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சுமூகமாக இருக்க உதவும் வகையில், நெரிசல் அதிகம் உள்ள 30 இடங்களில் ‘ஸ்மார்ட் லேன்’ (Smart Lane) செயல்படுத்தப்படும் என பிளஸ் தெரிவித்தது.

இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்  கொள்ளுமாறு பிளஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

அதோடு MyPLUS-TTA டிஜிட்டல் பயண அட்டவணையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயண அட்டவணையைப் பண்டிகைக் காலங்களில் மட்டுமன்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச நாட்களிலும் அணுகலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.