மாற்றுத்திறனாளிகள் தினக் கொண்டாட்ட கார்னிவல் 2025இல் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

15 டிசம்பர் 2025, 6:05 AM
மாற்றுத்திறனாளிகள் தினக் கொண்டாட்ட கார்னிவல் 2025இல் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், டிச 15: மாற்றுத்திறனாளிகள் தினக் கொண்டாட்ட கார்னிவல் 2025இல் கலந்து கொள்ள மாநில அரசு பொதுமக்களை அழைக்கிறது. இந்நிகழ்வு 20 டிசம்பரில் UiTM செலாயாங் கிளையில் உள்ள மருத்துவப் புலத்தில் நடைபெறும்.

காலை 8 மணி முதல் நண்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வு மாற்றுத்திறனாளி சமூகத்துடன் அறிமுகம் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என சமூக நலன் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.

“இந்த கார்னிவல் ஒரு நிகழ்ச்சி மட்டும் அல்ல; மாற்றுத்திறனாளி (OKU) சமூகத்துக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் ஆதரவு வழங்கும் ஒரு தளமாகும்,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகள்:

பெற்றோருக்கான கருத்தரங்கம்

குழந்தைகளுக்கான வளர்ச்சி சோதனை

KITA OKU Fun Walk – நடைப்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான போட்டிகள்

பல் பரிசோதனை

அரசு சாரா அமைப்புகளின் கண்காட்சிகள்

இந்த நிகழ்வு சமூக ஒற்றுமையை வலுப்படுத்தோடு மதிப்பும் அன்பும் வளர்க்க ஒரு வாய்ப்பாகும். இதில் அனைவரும் பங்கேற்று, சிறப்பிக்க வேண்டும் என அன்பால் சாரி அழைப்பு விடுத்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.