ரிம்பா பெர்மையில் விபத்துகளைக் குறைக்க விவேகமான சமிக்ஞை விளக்குகள் நிறுவப்படும்

3 டிசம்பர் 2025, 8:40 AM
ரிம்பா பெர்மையில் விபத்துகளைக் குறைக்க விவேகமான சமிக்ஞை விளக்குகள் நிறுவப்படும்

ஷா ஆலம், டிச 3: சைபர்ஜெயாவில் உள்ள சிம்பாங் ரிம்பா பெர்மை (Simpang Rimba Permai) பகுதியில் விபத்துகளை குறைக்க விவேகமான சமிக்ஞை விளக்குகளை நிறுவுவதன் மூலம் சிப்பாங் நகராண்மை கழகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளது. உள்ளூர் மக்கள் இவ்விடத்தை “சிம்பாங் மாவுத்” என அழைக்கின்றனர்.

விவேகமான சமிக்ஞை விளக்கை நிறுவும் திட்டத்திற்கு கடந்த 26 நவம்பர் அன்று ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டது மற்றும் நிறுவல் பணிகள் இரண்டு மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"விவேகமான சமிக்ஞை விளக்கு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும், அப்பகுதியில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவும்," என்று மலேசியா டிரிப்யூன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அமைப்பு முழுமையாக இயங்கும் வரை, நிலையான பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, போக்குவரத்து விதிகளை மீறும் நடவடிக்கைகளை மலேசியா காவல்துறையினரிடம் சிப்பாங் நகராண்மை கழகம் சமர்ப்பிக்கும்.

விபத்து தொடர்பான காணொளிகளைக் காணும்போது, ஓட்டுனர்களின் செயல்களும் விபத்துகள் ஏற்பட காரணம் என தெரியவந்தது.

இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை செயல்படுத்தும் வரை வேக அளவையும் விதிமுறைகளையும் கடைபிடிக்குமாறு சாலை பயணிகள் அறிவுறுத்துப்படுகின்றனர்," என சிப்பாங் நகராண்மை கழகம் கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.