ஷா ஆலம், டிச 2: சாலாக் பொது சந்தை வழக்கம்போல் மீண்டும் செயல்படச் செய்யும் நோக்கில், கடந்த சனிக்கிழமை அங்கு வெள்ளத்துக்குப் பிந்தைய சுத்தம் செய்யும் பணிகளை சிப்பாங் நகராண்மை கழகம் (MPSepang) பல தொழில்நுட்ப துறைகளுடன் இணைந்து மேற்கொண்டது.
இந்த தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை, உரிமம் வழங்கும் துறை, பூங்கா மற்றும் நிலவடிவமைப்பு துறையுடன் அச்சந்தை வியாபாரிகளும் பங்கேற்றனர் என சிப்பாங் நகராண்மை கழகம் தெரிவித்தது.
“இந்நடவடிக்கையில் வெள்ளத்தின் போது சேதமடைந்த விற்பனை பொருட்கள் மற்றும் வியாபார உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வெள்ளக் கழிவுகளையும் சேகரித்து அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டது.”
இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கை பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மீண்டும் வழக்கம்போல் செயல்பட உதவுவதுடன், குறிப்பிட்ட சந்தை உள்ளூர் மக்களுக்காக மீண்டும் இயங்குவதையும் உறுதிப்படுத்தும்,” என்று சிப்பாங் நகராண்மை கழகம் அறிவித்தது.








