ஷா ஆலம், 4 ஜன: சிப்பாங் மாவட்ட மற்றும் நில அலுவலகம் (PDT Sepang), தங்கள் நிலம் சட்ட விரோதமாக கோயில் கட்டப்பட்டதாகக் கூறும் உரிமையாளர்கள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அந்த அமைப்பு உறுதியாகக் கூறுகையில், கட்டமைப்புகளை இடிப்பதற்கான எந்தப் பணியும் சிவில் நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகே அமல்படுத்த முடியும். நாட்டு நிலச் சட்டத்தின் (KTN) பிரிவு 425-இன் கீழ் அரசு நிலம், ரிசர்வ் நிலம் மற்றும் சுரங்க நிலங்களில் ஆக்கிரமிப்பு க்கு மட்டுமே அமலாக்க நடவடிக்கை பொருந்தும் என்று விளக்கியது.
“தனிப்பட்ட உரிமை நிலங்களுக்கு, உரிமை, பராமரிப்பு மற்றும் எந்தவித சட்ட நடவடிக்கை முழுமையாக நில உரிமையாளரின் பொறுப்பில் உள்ளது. இது நாட்டு நிலச் சட்டத்தின் பிரிவு 44(1)(a)-இன் கீழ் வழங்கப்பட்டது.தனிப்பட்ட நிலங்களில் ஆக்கிரமிப்பு என்பது நில உரிமையாளருக்கும் ஆக்கிரமிப்பாளருக்கு இடையிலான உள்ள சிவில் சர்ச்சை. எனவே, நில உரிமையாளர் வழக்கு நடவடிக்கைகளை தொடங்கி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அது பேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அதேநேரம், பிடிடி சிப்பாங் நில உரிமையாளர் போலீஸ் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியது. இது அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் வழக்குக்கான ஆரம்ப ஆதாரமாகவும் இருக்கும். மேலும் வழக்கறிஞரை நியமிக்கவும் ஆலோசனை வழங்கியது.
அறிக்கையின்படி, பிடிடி சிப்பாங் பொது நலன் சார்ந்த நில ஆக்கிரமிப்புகள் பிரச்சினையை அறிவுபூர்வமாக கையாள உறுதிப்பாட்டை அது வெளிப்படுத்தியது. நில உரிமையாளர்கள் பொது அமைதியை பாதிக்கும் தனிப்பட்ட நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியது.
“அதேநேரம், பொதுமக்கள் உண்மை இல்லாத தகவல்களை பரப்புவதைத் தவிர்க்குமாறும், குழப்பம் மற்றும் பொது கவலையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை செய்யாமல் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
நேற்று சமூக வலைதளங்களில் வைரலான 70 வயது ஓய்வு பெற்றவர் சுஹைலி அஹ்மத், டிங்கில், தாமான் டோபாஸ் பகுதியில் உள்ள தனது நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக கூறினார்.சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை விற்கும் அவரது திட்டம் தடைபட்டது. ஏனெனில் அந்த நிலத்தில் அனுமதியின்றி ஒரு கோயில் கட்டப் பட்டுள்ளதை கண்டுபிடித்தார்.
அந்த கட்டமைப்பின் இருப்பை சமீபத்தில் நிலத்தைப் பார்வையிட்டபோது தான் அறிந்தார். அது விற்பனைக்கான சலுகை பெற்ற பிறகு. அந்த கோயில் 2001-இல் அவர் வாங்கிய நிலத்தில் அறியாமல் மீண்டும் கட்டப்பட்டு விரிவாக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிலம் பிரதான சாலையிலிருந்து தொலைவில் உள்ளதால், பல ஆண்டுகளாக அரிதாக பார்வையிடப் பட்டதாகவும் கூறினார்