கோலாலம்பூர், நவ 28 — வெள்ளத்தால் தொலைந்து போன அல்லது சேதமடைந்த முக்கியமான அடையாள ஆவணங்களை இலவசமாக மாற்றி வழங்கப்படும் என்று தேசிய பதிவு துறை (ஜேபிஎன்) தெரிவித்துள்ளது.
இந்த மாற்று சேவை அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், மரணச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், குடியுரிமைச் சான்றிதழ் மற்றும் பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களை உள்ளடக்கியதாகும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.
“எந்தவொரு பேரிடர் ஏற்பட்டாலும், பாதிக்கப்பட்ட அனைவரும் தமக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை முதன்மையாகக் கருத வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
நாம் தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான வெள்ளம் போன்ற சவால்களால் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் ஆவண செயல்முறையை எளிதாக்க உள்துறை அமைச்சும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் உதவுவார்கள்.
“மடாணி அரசு மக்களுக்கு உதவுவது குறித்து முழு உறுதிப்பாட்டுடன் உள்ளது, குறிப்பாக அவர்கள் சோதனைகள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் நேரங்களில் ஆகும் என்றார். அனைத்து வடிவிலான உதவிகளும் விரைவாகவும் திறம்படவும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும்,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.








