முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத 4.4 மில்லியன் பழைய வாகனங்கள்

10 நவம்பர் 2025, 3:51 AM
முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத 4.4 மில்லியன் பழைய வாகனங்கள்

கோலாலம்பூர், நவ 10 - 20 ஆண்டுகளுக்கு மேல் பழையதாக உள்ள 4.4 மில்லியன் வாகனங்கள் முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் மலேசியச் சாலைகளில் இயங்குகின்றன.

அதாவது இந்த வாகனங்களில் airbags, ABS, ESC போன்ற முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இல்லை. இதனால், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) எச்சரித்துள்ளது.

வணிக பரிசோதனை கட்டுப்பாடுகள் இல்லாமல் சாலையில் இயங்கும் இந்த வாகனங்கள் பெரும்பாலும் தனியாருடையதாகும்.

எனவே, அசம்பாவிதங்களைத் தவிர்க்க, வாகன உரிமையாளர்கள் அவற்றின் பாதுகாப்பு குறைபாடுகளை உணர வேண்டும். உரிமையாளர்கள்வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் அல்லது அவற்றை இனியும் சாலையில் பயன்படுத்தக் கூடாது என ஜேபிஜே அறிவுறுத்தியுள்ளது.

அதே சமயம் அதிகாரிகள் தரப்பிலும், கடுமையான கொள்கை மாற்றங்கள், புதிய விழிப்புணர்வு முயற்சிகள், மற்றும் பழைய வாகனங்களை மாற்ற ஊக்கத்திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஜேபிஜே தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.