அலோர் ஸ்டார் நவம்பர் 2 — ஜெர்லுன், பிடா 3 கிராமத்தில் நேற்று தனது மைத்துனரை வெட்டி கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீசார் ஆறு நாட்கள் ரிமாண்டில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முஹமட் ரட்சி அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப் பொருள் தாக்கத்திலில்லையென உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்தவரின் உடல் அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரவு ஏற்பட்ட சண்டையில் மைத்துனர் மீது கொலைத் தாக்குதல் நடத்தியதில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உடலில் பல வெட்டுக் காயங்கள் மற்றும் தலை உடலிலிருந்து சுமார் ஒரு மீட்டர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.




