ad

சனிக்கிழமை,சபாக் பெர்ணமில் வெவ்வேறு விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழப்பு.

19 அக்டோபர் 2025, 7:34 AM
சனிக்கிழமை,சபாக் பெர்ணமில் வெவ்வேறு விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழப்பு.

சபாக் பெர்ணம் , அக்டோபர் 19: சபாக் பெர்ணம் மாவட்டத்தில் நடந்த தனித்தனி விபத்துகளில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இறந்தனர்.

சபாக் பெர்ணம் மாவட்ட காவல் துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமது யூசுப் அகமது கூறுகையில், முதல் சம்பவத்தில் 22 வயதான இரவு சந்தை வர்த்தகர் ஒருவர் தெலுக் இந்தான் -கிள்ளான் சாலையின் கிலோமீட்டர் 57 இல், சுங்கை பெசார்  சிம்பாங் லிமாவ் அருகே நேற்று மாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானார். 

பாதிக்கப்பட்டவர் அம்பாங்கில் இருந்து சுங்கை லிமாவில்  உள்ள தனது கிராமத்திற்கு யமஹா 15Z இல் சவாரி செய்து இடது புறம் திரும்பிய பொழுது தொயோத்தா ஹைஸ் வேனின் பக்கத்துடன் மோதியது ஆரம்ப விசாரணையில் தெரிய வந்தது.

பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது "என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது சம்பவத்தில், கடந்த புதன்கிழமை செகிஞ்சான் அருகே கிலோமீட்டர் 72 இல் அதே சாலையில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு 82 வயது முதியவர் இறந்தார்.

"பாதிக்கப்பட்டவர் சுங்கை பெசாரில்  இருந்து ஹோண்டா EX5 இல் சவாரி செய்து யூ-டர்ன் செய்தபோது 24 வயது மழலையர் பள்ளி ஆசிரியரால் இயக்கப்பட்ட பெரோடுவா மைவியுடன் மோதிய போது காயங்களுக்கு  உள்ளானார்.

மதியம் 12:30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்டவர் இன்று காலை 6 மணிக்கு இறந்து  விட்டதாக உறுதி செய்யப்பட்டது "என்று அவர் கூறினார். சாலை போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இரண்டு வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.  

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.