காஜாங், அக் 1 - கடந்த சனிக்கிழமை புக்கிட் காஜாங் டோல் பிளாசாவில் நடந்த விபத்தில் 1 வயது 4 மாதக் குழந்தை உயிரிழந்த நிலையில், மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் (MIROS) அதிர்ச்சி தரவுகளை வெளியிட்டுள்ளது.
2014 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 434 குழந்தைகள், அதாவது வாரந்தோறும் எட்டு குழந்தைகள் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர் என்ற புள்ளி விவரங்களை வெளியிட்டது.
இந்நிலையில், லாரி பராமரிப்பு குறைபாடு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை (CRS) பயன்படுத்தாதது ஆகியவைதான் இத்தகைய சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் எனக் MIROS குறிப்பிட்டது.
பாதுகாப்பு இருக்கையை அரசாங்கம் கட்டாயமாகிய போதும் வாகனமோட்டும் பெற்றோர்களில் 30 சதவீதத்தினர் மட்டுமே வாகனத்தில் பாதுகாப்பு இருக்கையை பயன்படுத்துகின்றனர். வாகனத்தில் பாதுகாப்பு இருக்கையை பயன்படுத்துவதன் வழி குழந்தைகளின் மரண அபாயத்தை 70 சதவீதம் வரை குறைக்க முடியும் என்பதனையும் அறிவித்தது.
மேலும், நாட்டில் லாரி ஓட்டுனர்களின் வெறும் 4 சதவீதத்தினர் மட்டுமே பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும், கனரக வாகன விபத்துகளை குறைக்க வேகக் கட்டுப்பாடு, GPS கண்காணிப்பு, சாலை வடிவமைப்பில் மேம்பாடு, பாதுகாப்புத் தணிக்கைகள் அவசியம் எனவும் மைரோஸ் வலியுறுத்தியது.