கோலாலம்பூர், செப். 4 - இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நேற்று காலை சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றார்.
வட கொரிய உச்ச தலைவருடன் கைகுலுக்கி உரையாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாக பிரதமர் அன்வார் தனது முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தார்.
நான் தற்செயலாக வட கொரிய அரசாங்கத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்தித்தேன். அவர் தியானன்மென் சதுக்கத்தில் அணிவகுப்பைக் காண வந்திருந்தார். அவருக்கு வணக்கம் தெரிவித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் அன்வாரும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் காலை 8.30 மணிக்கு சதுக்கம் வந்தடைந்தனர். அவர்களை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் முதல் பெண்மணி பெங் லியுவான் ஆகியோர் வரவேற்றனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹாமோனி, மங்கோலிய அதிபர் உக்னா குரேல்சுக், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மற்றும் மியான்மரின் இடைக்கால அதிபர் மின் ஆங் லைங் உள்ளிட்ட 26 வெளிநாட்டுத் தலைவர்கள் இந்த பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சு கூறியது.
சீன ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பிய இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு குறித்து இணையவாசிகள் பரவலாகக் கருத்துகளைத் தெரிவித்தனர். அவர்கள் பெரும்பாலும் உலகத் தலைவர்களுடனான பிரதமரின் நெருக்கத்தைப் பாராட்டினர்.
சீனாவில் வட கொரிய தலைவருடன் பிரதமர் சந்திப்பு - கைக்குலுக்கி அளவளாவினார்
4 செப்டெம்பர் 2025, 1:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
தேசிய தின உரையில் முக்கிய முயற்சிகளை அறிவிப்பார் பிரதமர்
Bernama
29 ஆகஸ்ட் 2026

national
RON95 மானிய விலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும் - பிரதமர்
Shalini Rajamogun
3 மார்ச் 2026

national
பிரதமர் பதவிக்கால திருத்த மசோதா தோல்வி: நாடாளுமன்றத்தில் பரபரப்பு
Mavitthran
3 மார்ச் 2026

national
பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவது குறித்த சட்ட திருத்த மசோதா அடுத்த வாரம் இரண்டாம் வாசிப்புக்கு உட்படுத்தப்படும்
Mavitthran
27 பிப்ரவரி 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?





