SELANGOR

இணையம் வழி 30.15 மில்லியன் வெள்ளி வரி வசூல்- எம்.பி.எஸ். தகவல்

27 ஜூன் 2025, 12:04 PM
இணையம் வழி 30.15 மில்லியன் வெள்ளி வரி வசூல்- எம்.பி.எஸ். தகவல்

ஷா ஆலம், ஜூன் 26- இவ்வாண்டு தொடங்கி கடந்த மே மாதம் வரை MyMPS இணையக் கட்டண அகப்பக்கம்  மூலம் 30.15  மில்லியன் வெள்ளி வரியை செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்.) வசூல் செய்துள்ளது.

மதிப்பீட்டு வரி, வணிக உரிமம் புதுப்பித்தல், கடை வாடகை, கட்டிடம் மற்றும் திட்டமிடல் அனுமதி, அபராதம், முன்பணம் மற்றும் திட்டங்கள் ஆகியவை அந்த கட்டணங்களில் அடங்கும் என்று நகராண்மைக் கழகத் துணைத் தலைவர் அஸ்'ஹார் சம்சூரி கூறினார்.

மதிப்பீட்டு வரியின் வாயிலாக மிக அதிகமாக அதாவது  44,719 பரிவர்த்தனைகள் மூலம்  24.66 மில்லியன் வெள்ளி வசூலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லைசென்ஸ் புதுப்பிப்பு மூலம்  2.40 மில்லியன் வெள்ளி  (3,048 பரிவர்த்தனைகள்) வசூலானது.

மேலும், கடை வாடகை வழி (4,277 பரிவர்த்தனைகள்)  1.48 மில்லியன் வெள்ளியும்   கட்டிடம் மற்றும் திட்டமிடல் அனுமதிகள் 1.03 மில்லியன் வெள்ளியும் (226 பரிவர்த்தனைகள்)  அபராதம் மூலம் 162,785 வெள்ளியும்  (2,479 பரிவர்த்தனைகள்)  வசூலிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற நகராண்மைக் கழகத்தின் மாதாந்திர கூட்டத்தில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மே மாதம் வரை நகராண்மைக் கழகம்  பெற்ற ரொக்கமில்லா வசூலின் மதிப்பு  மொத்த தொகையில் 77.63 சதவீதமாக இருந்தது. பொதுமக்கள், குறிப்பாக நகராண்மைக் கழக நிர்வாகத்தின் கீழ் உள்ள வர்த்தகர்கள் மற்றும் கட்டிடஉரிமையாளர்கள், mymps.mps.gov.my அகப்பக்கத்தில் சரிபார்த்து  பணம் செலுத்தலாம் என்று அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.