(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 23 - நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் நமக்கு இன்றியமையாத தேவையாக விளங்குவது பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணங்களாகும்.
இத்தகைய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இந்நாட்டில் பிறந்த பலர் எந்த உரிமையும் சலுகையுமின்றி, இன்னும் நாடற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.
இத்தகையத் தரப்பினருக்கு அடையாளக் ஆவணங்களைப் பெறுவதற்கான வழிவகைகள் குறித்து தெளிவான விளக்கத்தை அளிக்கும் நோக்கில் கோத்தா கெமுனிங் தொகுதி சிறப்பு விளக்கமளிப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு ஜூன் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ஷா ஆலம், செக்சன் 32, எம்.பி.எஸ்.ஏ. ஏஸ்டர் மண்டபத்தில் நடைபெறும்.
இந்த நிகழ்வில் பிறப்புப் பத்திரம், குடியுரிமை, சிவப்பு அடையாளக்கார், குழந்தை தத்தெடுப்பு விண்ணப்பங்கள் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து தேசிய பதிவுத் துறை அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை வழங்குவார்கள் என்று கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமனாற உறுப்பினர் எஸ். பிரகாஷ் கூறினார்.
அடையாள ஆவணங்கள இல்லாத காரணத்தால் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவ சேவையைப் பெறுவதிலும் அரசாங்க உதவித் திட்டங்களில் பங்கேற்பதிலும் அவர்கள் எதிர்நோக்கும் சிரமத்தை உணர்ந்து தாங்கள் இந்த அடையாள ஆவண விளக்கமளிப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தனது முகநூலில் வெளியிட்ட காணொளியில் தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் பங்கேற்று அடையாள ஆவண விண்ணப்பம் தொடர்பான விளக்கங்களைப் பெற விரும்பும் தொகுதி மக்கள் https://forms.gle/


