ஷா ஆலம், ஜூன் 20: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ள அம்பாங் ஜெயா மீன்பிடி போட்டியின் வெற்றியாளர்களுக்கு RM10,000க்கும் அதிகமான ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.
தாசிக் பாண்டன் பெர்டானாவில் நடைபெறும் இந்த நிகழ்வு, அம்பாங் ஜெயாவின் சுற்றுலா இடங்களில் ஒன்றாக குறிப்பிட்ட ஏரியை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் தெரிவித்தது.
“இப்போட்டியின் வெற்றியாளருக்கு RM4,000 வழங்கப்படும். மேலும், இரண்டாம் நிலை (RM1,000), மூன்றாம் நிலை (RM700) மற்றும் நான்காவது முதல் 70வது நிலை வெற்றியாளர்களுக்கு தலா RM50 வழங்கப்படும்
இப்போட்டியின் முதல் 400 பங்கேற்பாளர்களுக்கு இலவச டி-சர்ட்டும் வழங்கப்படும்," என்றும் தெரிவிக்கப்பட்டட்து.
மேல் தகவலுக்கு, 013-2667011 (Encik Syukur) என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.


