SELANGOR

இறப்பு உதவி திட்டத்தில் பதிவு செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு

18 ஜூன் 2025, 11:39 AM
இறப்பு உதவி திட்டத்தில் பதிவு செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 18: எதிர்வரும் சனிக்கிழமை கைராட் டாருல் எஹ்சான் (KDE) இறப்பு உதவி திட்டத்தில் பதிவு செய்ய பொதுமக்களுக்கு கின்றாரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிகழ்வு தாமான் கின்றாராவில் உள்ள MBSJ TK1 சமூக மண்டபத்தில் (பசார் பாகியின் அருகில்) நடைபெறவுள்ளது.

கைராட் டாருல் எஹ்சான் திட்டத்தில் முதியோர் அல்லது ஊனமுற்றோர்கள் (OKU) பதிவு செய்வதற்கு வசதியாக, காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தனது தரப்பு ஒரு நடமாடும் கவுண்டரைத் திறக்கும் என்று இங் சீ ஹான் முகநூல் மூலம் தெரிவித்தார்.

“முதியோர் அல்லது ஊனமுற்றோரின் குடும்பத்தாருக்கு மாநில அரசு வழங்கும் RM1,000 இறப்பு நிதியுதவியை, மாநில அரசின் மக்கள் மீதான அக்கறையின் அடையாளமாக விளங்குகிறது.

“நாடமாடும் கவுண்டருக்கு வாருங்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவுவார்கள். "எதிர்காலத்தில் வாரிசுகளுக்கு உதவும் வகையில் இப்போதே பதிவு செய்யுங்கள்," என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2024இல், 20,000 பெறுநர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டத்தை வெற்றிபெற செய்வதற்காக மாநில அரசு RM20 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.