SELANGOR

500 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு  இலவச பெட்ரோல் - எம்.பி.எஸ்.ஏ. வழங்குகிறது

16 ஜூன் 2025, 1:25 PM
500 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு  இலவச பெட்ரோல் - எம்.பி.எஸ்.ஏ. வழங்குகிறது

ஷா ஆலம், ஜூன் 16-  ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் நாளை காலை 11.00 மணி தொடங்கி  இங்குள்ள  செக்சன் 15 பெட்ரோனாஸ் பெட்ரோல்  நிலையத்தில் இலவசமாக  பெட்ரோல் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் முதலில் வரும் 500  மோட்டார் சைக்கிளோட்டிகள் 10 தலா  வெள்ளி மதிப்புள்ள இலவச பெட்ரோல் நிரப்பும் வாய்ப்பைப் பெறுவர்.

மாநகர் மன்றத்தின் 25வது வெள்ளி விழாவை முன்னிட்டு  இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாநகர் மன்றத்தின் சமூக மேம்பாட்டுத் துறை இயக்குநர்  ஷாரின் அகமது கூறினார்.

உணவு விநியோகம் செய்பவர்கள், அரசு ஊழியர்கள், தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள உயர்கல்வி  மாணவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

ஆகவே, ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள  மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை நாங்கள் காலை 11.00  மணி தொடங்கி செக்சன் 15 இல் உள்ள பெட்ரோனாஸ் நிலையத்திற்கு வர அழைக்கிறோம்,

இந்தத் திட்டத்தின் மூலம்  மோட்டார் சைக்கிள்களுக்கு பெட்ரோல்  நிரப்புவதில் அவர்களுக்கு ஏற்படும்   செலவுகளைக் குறைப்பதில் உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.