ஷா ஆலம், ஜூன் 13 - தெற்கு சிலாங்கூரின் பந்திங் முதல் மேற்கு பேராக் (தைப்பிங்) வரை 233 கிலோமீட்டர் நெடுஞ்சாலை மேம்பாட்டு பணி கடந்த டிசம்பர் 2013 ம் ஆண்டில் முடுக்கி விடப்பட்டது.
அடுத்த ஆண்டில் முழுமையாக முற்றுபெற வேண்டிய நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கு நிலத்தை கையகப்படுத்தும் அரசாங்கம், பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு நீதிப்படி நிலத்திற்கு சரியான மதிப்பு அளிக்கப்பட வேண்டும்.
ஆனால் கிள்ளான் பத்து அம்பாட் இந்திய கிராமத்தில் நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கு எடுத்த நிலம் மற்றும் சொத்துகளுக்கு சரியான நஷ்ட ஈடு கொடுக்கவில்லை என புகார் அளித்த நில உரிமையாளர்களின் கோரிக்கைக்கு முறையாக கட்டுமான குத்தகையாளர் செயல்படவில்லை.
எனவே, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மீது அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் அவர்கள் கோரிக்கையும் பத்திரிக்கை விளக்கமும் அளித்தார்.


