SELANGOR

`ஜோம் இசி மின்யாக் மோட்டார் சைக்கிள்` திட்டத்தில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

10 ஜூன் 2025, 4:57 PM
`ஜோம் இசி மின்யாக் மோட்டார் சைக்கிள்` திட்டத்தில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 10: ஜூன் 17 ஆம் தேதி ஷா ஆலம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள `ஜோம் இசி மின்யாக் மோட்டார் சைக்கிள்` இலவச எரிபொருள் திட்டத்தில் பங்கேற்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி காலை 11 மணிக்கு ஷா ஆலம், செக்‌ஷன் 15 இல் உள்ள பெட்ரோனாஸ் நிலையத்தில் நடைபெறும். இந்த சலுகை முதலில் வரும் 500 மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் எம்பிஎஸ்ஏ முகநூல் மூலம் தெரிவித்தது.

இந்த திட்டம் நகரத்தின் சீரான போக்குவரத்திற்கு முக்கிய பங்களிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச எரிபொருளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற பொதுமக்கள் சீக்கிரம் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

https://selangorkini.my/ta/528299/ மலேசிய பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.