SELANGOR

காகாசான் ரும்புன் சிலாங்கூர் இரண்டாம் தொடர் ஆண்டு இறுதியில் நடைபெறும்

10 ஜூன் 2025, 10:10 AM
காகாசான் ரும்புன் சிலாங்கூர் இரண்டாம் தொடர் ஆண்டு இறுதியில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 10 - காகாசான் ரும்புன் சிலாங்கூர் (ஜி.ஆர்.எஸ்.)

திட்டத்தின் இரண்டாம் தொடர் வெகு சிறப்பான முறையிலும் பிருமாண்ட

அளவிலும் ஆண்டு இறுதியில் நடைபெறும்.

இந்த இரண்டாம் தொடரின் வடிவம் குறித்து அரண்மனை மற்றும் மந்திரி

பெசார் அலுவலகத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகக் கிராம

மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிஸாம்

இஸ்மாயில் கூறினார்.

கடந்த ஆண்டுகளில் இந்த ஜி.ஆர்.எஸ். நிகழ்வுக்கு கிடைத்த அபரிமித

ஆதரவைத் தொடர்ந்து இவ்வாண்டும் இத்திட்டத்தை தொடரவிருக்கிறோம்.

இந்த நிகழ்வில் சில விஷயங்களை மறுவரிசைப்படுத்த வேண்டியுள்ளதால்

இதனை ஆண்டு இறுதிக்கு ஒத்தி வைத்துள்ளோம். இந்த நிகழ்வை மேலும்

மெருகூட்டுவதற்கு இது பெரிதும் உதவும் என்றார் அவர்.

இந்த ஜி.ஆர்.எஸ். நிகழ்வுடன் மேன்மை தங்கிய ராஜா மூடா சிலாங்கூர்,

தெங்கு அமீர் ஷா இன்னும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதோடு

அனைத்து மாவட்டங்களுக்கும் வருகை புரிந்து மக்களுடன்

கலந்துரையாடுவார் என ரிஸாம் குறிப்பிட்டார்.

தேசிய ஒற்றுமை மற்றும் மாநிலத்தில் சமூகவியல் முறையை

வலுப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஜி.ஆர்.எஸ். நிகழ்வு விழா, ஆய்வுக் கொள்கைகள், ஒருமைப்பாடு,

கிராம தலைமை நிர்வாகம், கட்டமைப்பு மற்றும் ஆக்கத்திறனளிப்பு ஆகிய

ஆறு கோட்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் உலு சிலாங்கூரில் தொடங்கிய அனைத்து

மாவட்டங்களையும் உள்ளடக்கிய இந்த நிகழ்வு கோம்பாக்கில் முடிவுக்கு

வந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.