கோலாலம்பூர், ஜூன் 9 - நேற்று ஜகார்த்தாவில் நடந்த இந்தோனேஷியா பூப்பந்து 2025 இறுதிப் போட்டியில் தேசிய பெண்கள் இரட்டையர் ஜோடியான பெர்லி தான் – எம்.தீனா செயல்திறனை தேசிய இரட்டையர் பயிற்சி இயக்குனர் ரெக்ஸி வெகுவாகப் பாராட்டினார்.
முதல் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை சிறிய இடைவெளியில் இழந்த போதிலும், உலகின் முதல் நிலை ஜோடியான சீனாவின் லியு ஷெங் ஷு மற்றும் தான் நிங்கிற்கு எதிராக நமது ஜோடியின் அபார விளையாட்டை குறிப்பிட்டு அவர் திருப்தி தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் மற்றும் 29 நிமிடங்கள் நீடிந்த போட்டியில், பெர்லி தான் – எம்.தீனா இறுதியில் 25-23, 12-21, 19-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.
"அவர்களின் செயல்திறன் அருமையாக இருந்தது என்பது மட்டுமே என்னால் சொல்ல முடியும்," என்று ரெக்ஸி பெர்னாமா விடம் கூறினார்.


