ஷா ஆலம், மே 27: எதிர்வரும் சனிக்கிழமை காலை 7 மணிக்கு பண்டார் பாரு செலாயாங்கில் உள்ள டத்தாரான் இல்முவில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் செரியா கார்னிவலில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னிட்டு காசி இபு ஓட்டம் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் வருகையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி தெரிவித்தார்.
அதைத் தவிர, குழந்தைகளுக்கான காத்தாடி தயாரிக்கும் போட்டி, பாலின வன்முறை குறித்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் பரிசுகளுடன் கூடிய அதிர்ஷ்டக் குலுக்கு ஆகியவையும் இடம்பெறும்.
“கைரட் டாருல் எஹ்சான் திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்கம், கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோடு தவாஸ் உறுப்பினர்களுக்கு பள்ளிப் பைகள் விநியோகித்தல் ஆகியவையும் நடைபெறும்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இந்த கார்னிவல் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் மற்றும் நுழைவு இலவசம் ஆகும். முதல் 1,000 பங்கேற்பாளர்களுக்கு இலவச டி-சர்ட்களும் காத்திருக்கின்றன.


