SELANGOR

பொதுமக்களுக்கு சுல்தான் ஆலம் ஷா அருங்காட்சியகம் இலவசமாக திறக்கப்பட்டிருக்கும்

27 மே 2025, 9:24 AM
பொதுமக்களுக்கு சுல்தான் ஆலம் ஷா அருங்காட்சியகம் இலவசமாக திறக்கப்பட்டிருக்கும்

ஷா ஆலம், மே 27: பள்ளி விடுமுறையை முன்னிட்டு மே 31 அன்று சுல்தான் ஆலம் ஷா அருங்காட்சியகம் இலவசமாக தஞ்சோங் சிப்பாட் தொகுதியின் குடியிருப்பாளர்களுக்கு திறக்கப்பட்டிருக்கும்.

இந்த திட்டம் சமூகத்திற்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, சிலாங்கூர் மாநிலத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியம் குறித்து வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அத்தொகுதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

"தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஒன்றாக சேர்ந்து அறிவை வளர்த்து கொள்ள இந்த திட்டத்தில் பங்குபெற வரவேற்கப்படுகிறார்கள்," என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான இடம் குறைவாக உள்ளது மற்றும் ஆர்வமுள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் கிராமத் தலைவர்கள் மூலம் உடனடியாகப் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஏற்பாட்டாளர்கள் சம்பந்தப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு போக்குவரத்து சேவை மற்றும் உணவை வழங்குவார்கள்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.