SELANGOR

300 மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தின் மூலம் உதவியைப் பெற்றனர்

26 மே 2025, 9:06 AM
300 மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தின் மூலம் உதவியைப் பெற்றனர்

ஷா ஆலம், மே 26: பண்டமாரன் தொகுதியில் மொத்தம் 300 மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தின் மூலம் உதவியைப் பெற்றனர்.

இத்திட்டத்திற்கு எம்பிஐ RM30,000 ஒதுக்கியுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் தோணி லியோங் தக் சீ தெரிவித்தார்.

“தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்துவதில், குறிப்பாக பெற்றோர்களின் சுமையைக் குறைக்க, RM100 ரொக்கம் வழங்கப்படுகிறது.

“உதவி பெறும் மாணவர்கள் பள்ளியால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் மற்றும் நிபந்தனையுடன் இந்த உதவி ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

முன்னர், MBI சிலாங்கூரில் பல்வேறு கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை வெற்றிகரமாக்க எம்பிஐ அறக்கட்டளை இந்த ஆண்டு சுமார் RM15 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக அதன் தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் அறிவித்தார்.

சிலாங்கூர் இலவச டியூசன் திட்டம் (PTRS), பள்ளிக்குத் திரும்பும் உதவித் திட்டம், பள்ளி உள்கட்டமைப்பை சரிசெய்தல், பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்திற்கு (PIBG) உதவுதல் ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 16,800 மாணவர்களுக்கு RM1.7 மில்லியனை (ஒவ்வொரு பெறுநருக்கும் RM100) எம்பிஐ ஒதுக்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.